Published : 11 Feb 2016 08:46 AM
Last Updated : 11 Feb 2016 08:46 AM

ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரம்: மத்திய அரசின் பதிலை பொறுத்துதான் நாடாளுமன்ற செயல்பாடு அமையும் - கோவையில் பிரகாஷ் காரத் தகவல்

ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகா ரத்தை, வரும் நாடாளுமன்றக் கூட் டத் தொடரில் நிச்சயம் எழுப்பு வோம். மத்திய அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்துதான் நாடாளு மன்றம் சுமூகமாக நடைபெறுமா என்பது தெரியவரும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

கோவையில் அந்தக் கட்சியின் சார்பில் நடைபெறும் பொதுக்கூட் டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

மோடி அரசு பொறுப்பேற்றது முதல் குடும்பநலம் மற்றும் சுகாதா ரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ஆகிய வற்றுக்கான் நிதி ஒதுக்கீட்டை பெருமளவு குறைத்துவிட்டது. இது சரியான செயல் கிடையாது.

வேலைவாய்ப்பு, விவசாயம் போன்றவற்றில் பிரச்சினைகள் அதிகமாகியுள்ளன. அவற்றுக்கு தீர்வு காணுவதாக தேர்தல் பிரச்சாரத்தில் கூறிய மோடி, தீர்வு ஏற்படுத்தாமல் பிரச்சினைகளை அதிகப்படுத்தியுள்ளார்.

வரும் 12, 13 ஆகிய தேதிகளில் மேற்கு வங்கத்தில் மாநிலக் குழுக் கூட்டம் நடக்கிறது. வரும் 17, 18-ம் தேதிகளில் மத்தியக் குழுக் கூட்டம் நடக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அந்தக் கூட்டங்களில் முடிவெடுக்கப்படும்.

ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத் தைப் பொறுத்தவரை மத்திய அமைச்சர்களின் தூண்டுதல்களும் இருந்துள்ளன. அந்தப் பிரச்சினை குறித்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எழுப்புவோம்.

மத்திய அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்துதான் நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெறுமா என்பது தெரிய வரும். காஷ்மீர் மாநிலத்தில் ஆளு நர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பாஜக - பிடிபி ஆகிய கட்சி கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

கெயில் எரிவாயு திட்டத் தைச் செயல்படுத்துவதில் விவசாயி களின் நலன் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம். தேவை ஏற்பட்டால் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x