Published : 03 Feb 2016 08:47 AM
Last Updated : 03 Feb 2016 08:47 AM

வியாசர்பாடி மேம்பாலம் வழியாக அதிகரிக்கும் வாகனங்கள்: பேசின் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் - அகலப்படுத்தும் பணி எப்போது தொடங்கும்?

நவம்பரில் திறக்கப்பட்ட வியாசர் பாடி மேம்பாலம் வழியாக போக்குவரத்து அதிகரித்திருப்ப தால், அதற்கு ஏற்றவாறு பேசின் பாலம் அகலப்படுத்தப்படாததால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

வியாசர்பாடி மேம்பாலம் கடந்த நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப் பட்டது. வெள்ள பாதிப்பின்போது வியாசர்பாடியில் உள்ள கணேச புரம், கல்யாணபுரம் ஆகிய இரு ரயில்வே சுரங்கப் பாதைகளும் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது வடசென்னையை, தென் சென்னையுடன் இணைக்கும் முக்கிய பாலமாக வியாசர்பாடி மேம்பாலம் விளங்கியது.

தற்போது வடசென்னையி லிருந்து சென்ட்ரல் நோக்கி வரும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் செல்ல வியாசர்பாடி மேம்பாலம் வழியாக செல்லவே விரும்புகின்றனர். அந்த மேம்பாலத்திலிருந்து பேசின் பாலம் வழியாக செல்லவேண்டி இருப்பதால், பேசின் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதி கரித்து வருகிறது.

மேலும் பேசின் பாலத்திலி ருந்து ஸ்டான்லி மருத்துவமனை செல்லும் சாலை, புளியந்தோப்பு செல்லும் சாலை ஆகியவற்றிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீஸார், 3 சக்கர சரக்கு ஏற்றும் சைக்கிள் களை காலை 11 மணி வரை வியாசர்பாடி மேம்பாலம்- பேசின் பாலம் இடையே அனு மதிக்காமல், ஓரமாக நிறுத்தி வைத்துவிடுகின்றனர்.

இது தொடர்பாக வியாசர்பாடி யைச் சேர்ந்த சம்பத் கூறும்போது, ‘‘வியாசர்பாடி மேம்பாலத்துக்கு திட்டமிட்ட அரசு, அதில் அதிகம் பேர் பயணித்தால், அவர்கள் பேசின் பாலத்தில் நெரிசலுக்கு உள்ளாவார்கள், அதை அகலப் படுத்த வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் கட்டியுள்ளது. இப்போது பேசின் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிக ரித்துவிட்டது. 150 மீட்டர் தூரத்தை கடக்க 15 நிமிடங்கள் ஆகிறது’’ என்றார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் கேட்டபோது, இப்பகுதியில் ஏற் பட்டுள்ள போக்குவரத்து நெரிச லுக்கு, பாலத்தை அகலப்படுத்து வது மட்டுமே தீர்வாக இருக்கும் என்றார். இது தொடர்பாக மாநக ராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘பேசின் பாலம், அங்கி ருந்து வியாசர்பாடி மேம்பாலம் வரையிலான சாலை, வியாசர்பாடி மேம்பாலம் அனைத்தும் நெடுஞ் சாலைத் துறையிடம் வருகிறது.

மாநகராட்சி சார்பில் சாலையோ, பாலமோ அமைப்ப தென்றால், ஆலோசகர் நியமித்து, ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்டு பணிகளை மேற் கொள்கிறோம். அவ்வாறு செய்தி ருந்தால், வியாசர்பாடி மேம்பாலப் பணியுடன் பேசின் பாலம் அகலப் படுத்தும் பணியும் சேர்ந்து தீர்வு கிடைத்திருக்கும். ஒரு பகுதி யில் பெரிய சாலைகளை அமைத்து, அதன் முடிவில் குறுகிய சாலைகள் இருந்தால், போக்கு வரத்து நெரிசல்தான் ஏற்படும்.

நாங்கள் மாநகர வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி, பேருந்து சாலை மட்டுமல்லாது, உட்புறச் சாலைகள் வரை தரமான சாலை களை அமைத்து வருகிறோம். இந்த மாநகரப் பகுதியில் அங் கொன்றும், இங்கொன்றுமாக, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மான சாலைகள், கோரமாக காட்சி யளிக்கின்றன.

மும்பை மற்றும் வெளிநாட்டு மாநகராட்சி எல்லையில் உள்ள அனைத்து பகுதிகளும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும். அனைத்து பணிகளையும் அவர் களே மேற்கொள்வார்கள். மாந கரம் முழுவதும் பணிகள் ஒரே சீராக நடைபெறும். சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளையும் மாநகராட்சியிடம் ஒப்படைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x