

சிவகங்கை மாவட்டம் கவுரிப் பட்டி ஊராட்சியில் அருகருகே உள்ள திருவேலங்குடி, காரம்பட்டி கிராமத்தில் 50 குழந்தைகள் இருந்தும் பள்ளி இல்லை. இதனால் அவர்கள் பல கி.மீ. நடந்து சென்று 3 கிராமங்களில் படித்து வருகின்றனர்.
இதையடுத்து, திருவேலங்குடியில் பள்ளி தொடங்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். அரசு நிலம் இல்லாததால் தனியார் சார்பில் பள்ளிக்காக 60 சென்ட் நிலம் தானமாக கொடுக்கப்பட்டது. ஆனால், எம்எல்ஏ பரிந் துரை இன்றி பள்ளி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இது குறித்து இந்து தமிழ் திசை நாளிதழில் ஜூலை 17-ல் செய்தி வெளியானது. இதையறிந்த சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன், திருவேலங் குடியில் நேற்று ஆய்வு செய்தார். ஒன்றியத் தலைவர் ராஜேஸ்வரி ஊராட்சித் தலைவர் சண் முகம், ஊராட்சிச் செயலாளர் ஆறுமுகம் உடன் இருந்தனர். தொடர்ந்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் பரிந்துரைக் கடிதம் கொடுத்தார். அப்போது செந்தில்நாதன் கூறுகையில், நடப்பாண்டிலேயே தொடக்கப் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும், என்றார்.