நீர்நிலையை ஆக்கிரமித்தால் சும்மா இருக்க மாட்டோம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

நீர்நிலையை ஆக்கிரமித்தால் சும்மா இருக்க மாட்டோம்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து
Updated on
1 min read

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்

சிவகாசியை சேர்ந்த ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு.

சிவகாசி பகுதியில் வேலாயுதம் ஊருணி அமைந்துள்ளது. இந்த ஊருணியில் நுண்ணிய உர மையம் அமைப்பதற்காக சிவகாசி நகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வேலாயுதம் ஊருணி முற்றிலுமாக அழியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு கட்டிடம் கட்ட எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.

அப்போது, எனது மனுவை 8 வாரங்களுக்குள் சிவகாசி நகராட்சி ஆணையர் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் எனது மனுவை உரிய முறையில் பரிசீலிக்காமல், அந்த ஊருணியில் நுண்ணிய உர மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த மனு, நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் ஆக்கிர மிப்புகள் குறித்து நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது. நீர்நிலைகளை பாது காப்பது மாநிலத்தின் கடமை.

சம்பந்தப்பட்ட இடம் புறம் போக்கு நிலமாக மாற்றப் பட்டுள்ளது. மேலும் நுண்ணிய உர மையம் அமைக்கப்பட்டு செயல் பாட்டுக்கு வந்துவிட்டது. எனவே, மழைக் காலத்தில் நுண்ணிய உர மையத்தால் நீர்நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in