

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ரூ.156.59 கோடி மதிப்பிலான கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார். ரூ.120.48 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்டுள்ள கால் நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளத் துறைகளுக்கான கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரியலூர், கோவை, தருமபுரி, கரூர், நாகப்பட்டினம், ஈரோடு, பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருவண்ணா மலை, தூத்துக்குடி, திருவாரூர், திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப் புரம் மாவட்டங்களில் ரூ.35.62 கோடியில் அறுவை சிகிச்சை அறை, ஆய்வக அறை, சிகிச்சைக் கூடம் ஆகிய வசதிகளுடன் கட்டப் பட்டுள்ள 162 கால்நடை மருந்தகக் கட்டடிங்கள்,
காஞ்சிபுரம், சிவகங்கையில் ரூ.1.21 கோடியில் கட்டப்பட்டுள்ள 2 கால்நடை நோய்கள் ஆய்வுப் பிரிவு கட்டிடங்கள், விருதுநகரில் ரூ.58 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலைய கட்டிடம்,
சென்னை அம்பத்தூர் பால் பண்ணை வளாகத்தில் ரூ.23.46 கோடியில் நிறுவப்பட்டுள்ள ஐஸ் கிரீம் மற்றும் பனீர் தயாரிக்கும் தொழிற்சாலை. ரூ.46.74 கோடியில் அதிநவீன பால்பண்ணையாக விரிவாக்கம் செய்யப்பட்ட கோவை பால்பண்ணை,
சென்னையில் அசோக் பில்லர், திருவான்மியூர், வண்ணாந்துறை, பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் ரூ.2.43 கோடியில் அமைக்கப்பட் டுள்ள அதிநவீன ஆவின் பாலகங் கள்,
தேனி, திருவண்ணாமலையில் ரூ.1.26 கோடியில் கட்டப்பட்டுள்ள துணை பதிவாளர் (பால்வளம்) அலுவலகக் கட்டிடங்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் நாகப் பட்டினம், ராமநாதபுரம், கடலூரில் ரூ.1.42 கோடியில் கட்டப்பட்டுள்ள பயிற்சி, ஆராய்ச்சி மையக் கட்டிடங்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் ரூ.1.38 கோடி யில் கட்டப்பட்டுள்ள சமுதாய வானொலி நிலையக் கட்டிடம்,
ஆண்டுக்கு 15 லட்சம் மீன்குஞ்சு கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, மரபு வழி மேம்படுத்தப் பட்ட பண்ணை திலேப்பியா மீன் குஞ்சுகள் பொரிப்பகம் தமிழகத் தில் முதல்முறையாக கிருஷ்ண கிரியில் ரூ.49 லட்சத்தில் அமைக் கப்பட்டுள்ளது. இவை உட்பட மொத்தம் ரூ.156.59 கோடி மதிப்பி லான கட்டிடங்களை முதல்வர் திறந்துவைத்தார்.
கால்நடை பராமரிப்பு, மீன்வளத் துறையின் நிர்வாகப் பயன்பாட் டுக்காக ரூ.29.70 கோடியில் ஐந்து அடுக்கு பல்துறை அலு வலக வளாகம், ரூ.7.98 கோடியில் 38 கால்நடை மருந்தகக் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. மீன்வளத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, தருமபுரி மாவட்டம் சின்னார், கிருஷ்ணகிரி மாவட்டம் கொள்ளனூர், கரூர் மாவட்டம் குளித்தலை, திருக்காம்புலியூர், தஞ்சாவூர் மாவட்டம் தட்டான் குளம், திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டி, சிவகங்கை மாவட்டம் பிரவலூர், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு ஆகிய இடங்களில் ரூ.24.50 கோடியில் மீன் விதைப் பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் கோவ ளம், கடலூர் மாவட்டம் பேட் டோடை, நாகப்பட்டினம் மாவட் டம் திருமுல்லைவாசல், சாமந்தான் பேட்டை, தூத்துக்குடி மாவட்டம் சிங்கித்துறை, பழையக்காயல், கன்னியாகுமரி மாவட்டம் கடியப் பட்டிணம் ஆகிய இடங்களில் ரூ.58.30 கோடியில் மீன் இறங்கு தளங்கள் கட்டப்பட உள்ளன. இவ் வாறு மொத்தம் ரூ.120.48 கோடி மதிப்பீட்டிலான கால்நடை பரா மரிப்பு, மீன்வளத் துறை பணி களுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டிகேஎம் சின்னையா, எஸ்.கோகுல இந்திரா, கே.ஏ.ஜெயபால், தலை மைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய தலைவர் அ.மில்லர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை செயலாளர் எஸ்.விஜயகுமார், மீன்வளத் துறை ஆணையர் பியூலா ராஜேஷ், பால்வளத் துறை ஆணையர் சுனீல் பாலிவால், கால்நடை பராமரிப்பு, மருத்துவப் பணிகள் துறை இயக்குநர் டி.ஆபிரகாம் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.