

அரசு ஊழியர்களின் காலவரை யற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தீவிரமாகியுள்ளது என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பவேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த 10-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தில் திரு வள்ளூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற் கின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூரில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழுவினர் சார்பில் வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி பேசியதாவது:
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள், தலைமைச் செயலாளரிடம் பேசினோம். ஆனால், அவர்கள் உரிய முறையில் எந்த பதிலும் தெரிவிக்காத நிலையில்தான் நாங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளோம்.
15-ம் தேதி
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் 15-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் எங்களுடன் இணைந்து ஈடுபட உள்ளனர். இதனால், அரசு ஊழியர்கள் போராட்டம் மேலும் தீவிரமாகிறது என்றார்.