

சேலம் மாவட்டத்தில் ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்து ஒரே உட்கோட்டத்தில் 6 ஆண்டுகள் பணியில் உள்ள போலீஸார் 400 பேருக்கு விருப்ப பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
சேலம் மாவட்ட காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்குப் பிரிவு, சிறப்புப் பிரிவுகளில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் எஸ்ஐ வரை பணிபுரியும் சுமார் 400 பேருக்கு விருப்பப் பணியிட மாறுதல் வழங்கும் முகாம் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.
இதில், பணியிட மாறுதல் தொடர்பான விருப்பங்களை போலீஸார், எஸ்பி அபிநவ்விடம் தெரிவித்தனர். இதையடுத்து, தகுதியுள்ளவர்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவுகளை எஸ்பி வழங்கினார். பின்னர் செய்தியாளர் களிடம் எஸ்பி கூறும்போது, நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து காவல் நிலையங் களிலும் பெண்களுக்கான உதவி மையங்கள் செயல்படுகின்றன. உதவி மையங்களுக்கு 20 அழைப்புகள் வந்தன. அதில் வயதான 3 பேர் இருப்பிட வசதி கேட்டனர் அவர்கள் பராமரிப்பு இல்லங்களில் சேர்க்கப்பட்டனர்” என்றார்.முகாமில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சக்திவேல், பாஸ்கரன், செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.