

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரத்து 707 கோடி செலவில், 18 ஆயிரத்து 978 குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பணிகளை தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் மேற் கொண்டு வருகிறது. நடப்பு நிதி யாண்டில் ரூ.1,993 கோடியில், 18,553 குறைந்த விலையிலான குடி யிருப்புகளை கட்டுவதற்கான பணி கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 34 ஆயிரத்து 13 குடியிருப்புகள், ரூ.1411 கோடியில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கென மத்திய அரசு ரூ.510 கோடியும், தமிழக அரசு ரூ.685 கோடியும் வழங்க உள்ளன.