

திமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. நேர்காணலின் 4-ம் நாளான நேற்று, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டத்தினர் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டத்திலிருந்து மொத்தம் 64 பேர் பங்கேற்றனர். இதை யடுத்து, ஈரோடு மாவட்டத்துக்கும் நேற்றைய தினம் நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணலில் முன்னாள் அமைச்சர்கள் முத்துச்சாமி, என்.கே.கே.பி.ராஜா, ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதை யடுத்து, மாலையில் கோவை மாவட்டத்துக்கான நேர்காணல் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.