Published : 19 Jul 2021 03:13 AM
Last Updated : 19 Jul 2021 03:13 AM

கரோனாவில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? - புதுச்சேரி சுகாதாரத்துறை விளக்கம்

புதுச்சேரியில் கரோனா தொற்றுக்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குழந்தை களுக்கு கரோனா தொற்று வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து கேள்வி, பதில் வடிவில் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று பாதிப்பு எவ்வாறு இருக்கும்?

பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளுக்கான பாதிப்பின் தன்மை குறைவாகவே உள்ளது. தேவையற்ற அச்சம் வேண்டாம்.

குழந்தைகளுக்கு கரோனாபாதிப்புவராமல் எவ்வாறு தடுக் கலாம்?

பெற்றோர்கள் முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றை கடைப்பிடித்தால் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் பாது காக்க முடியும்.

பச்சிளம் குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்படாமல் எவ்வாறு காத்திட முடியும்?

பாலூட்டும் தாய்மாரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். குழந்தைகள் ஈன்ற அன்னைக்கு கரோனா நோய்த்தொற்று இருந்தாலும் தாயும் சேயும் ஒன்றாகவே இருக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் மூலம் கரோனா கிருமி குழந்தைக்கு செல்லாது. மாறாக ஒரு நோய்க்கு எதிர்ப்பு அணுக்கள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு கிடைப்பது அனுகூலமாகும். கரோனா தொற்றுள்ள தாய், தாய்ப்பால் ஊட்டும் பொழுது முகக்கவசம் அணிதல் வேண்டும். மேலும் தன் கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

கரோனா பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன அறிகுறிகள் தென்படும்?

கரோனா தொற்றுடைய குழந் தைகள் எந்தவித அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். சில குழந்தை களுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப் போக்கு போன்றவை இருக்கலாம்.

கரோனா தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு என்னென்ன உட்கொள்ள கொடுக்க வேண்டும்?

கரோனா நோய் தொற்று ஏற்பட்ட குழந்தைகள் சோர்ந்து போகாமல், அவர்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அரிசி கஞ்சி, இளநீர், பழச்சாறு போன்றவற்றையும், சத்துள்ள உணவையும் அவர்க ளுக்கு கொடுக்க வேண்டும். வயிற்றுப்போக்கு இருப்பின் உப்பு சர்க்கரை கரைசல் அல்லது ஓஆர்எஸ் கொடுக்கலாம். காய்ச்ச லுக்கு பாராசிட்டமால் மருந்து போதுமானது. குழந்தைகளுக்கு தேவையற்ற மருந்துகளை மருத்துவ ஆலோசனை இன்றி கொடுப்பது நல்லதல்ல. கரோனா தவிர்த்து குழந்தைகளுக்கு ஏதேனும் நீண்டகால நோய்கள் (ஆஸ்துமா, சர்க்கரை நோய், நொடிப்பு போன்றவை) இருந்தால் மருத்துவ ஆலோசனைப்படி அதற்கு தேவையான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் மன நலம் காப்பது எப்படி?

கரோனா பிரச்சினையாலும், பள்ளிகளுக்கு செல்லாமல் வீட்டி லேயே அடைந்து கிடப்பதாலும் குழந்தைகளுக்கு மன உளைச்சல் அல்லது அழுத்தம் போன்ற மனநலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். குழந்தைகளுக்கு கூடுமானவரை தொலைக்காட்சி, அலைபேசி, கணினி போன்றவற்றின் பயன் பாட்டை குறைத்தல் நல்லது. ஊடகங்களின் பதட்டம் தரும் செய்தி கள் குழந்தைகளுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகளிடம் அன்பாய் அமர்ந்து பேசவும் அவர்களுக்கு ஏதேனும் மாற்றம் இருந்தால் அதை போக்க முற்பட வேண்டும். ஒருவேளை அவர்களுக்கு ஏதேனும் மனநலப் பிரச்சினைகள் இருந்தால் தக்க மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்திட, வீட்டுக்குள்ளேயே விளையாடலாம். குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகளை கண்ட றிந்து அவற்றை ஊக்குவிக்கலாம்.

கரோனா மூன்றாம் அலையை சமாளிக்க குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து உபகரணங்களுடன் கூடிய பிரத்யேக மருத்துவ பிரிவு தயார் நிலையில் உள்ளது.

இதற்கான பிரத்யேக மருத்துவ ஆலோசனை குழுவும் தயார் நிலையில் உள்ளது. அதனால் மக்கள் அச்சமின்றி கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி புதுச்சேரி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x