Published : 02 Feb 2016 02:28 PM
Last Updated : 02 Feb 2016 02:28 PM

பாஜக தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இடம்பெறும்: ஹெச்.ராஜா உறுதி

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இடம்பெறும் என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது:

முன்பு மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் செயலாளர், துணைச் செயலாளர் பொறுப்புகளை தமிழர்கள் வகித்தனர். தற்போது அந்த நிலை மாறியுள்ளது. 1967-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 2-ம் இடம் வகித்த தமிழகம், தற்போது 18-வது இடத்தில் உள்ளது.

மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள் இம்முறை பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்.

1969-ம் ஆண்டுக்கு முன் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 100 கூட இருக்காது. ஆனால், தற்போது மதுவால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இடம்பெறும்.

தமிழக அரசு ஒரு யூனிட் மணலை ரூ.350-க்கு விற்கிகிறது. அதை வியாபாரிகள் வாங்கி, ரூ.3 ஆயிரத்துக்கு விற்கின்றனர். டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு, அரசு மணல் விற்பனையில் ஈடுபட்டால் வருவாய் இழப்பை சரி செய்யலாம்.

சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சியின் அகில இந்திய தலைமை முடிவெடுக்கும் என்றார்.

பேட்டியின்போது, மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் பேட்டை சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x