Published : 08 Feb 2016 11:01 AM
Last Updated : 08 Feb 2016 11:01 AM

சியாச்சினில் பனிச்சரிவில் சிக்கிய எனது மகன் உயிருடன் திரும்பி வருவார்: ராணுவ வீரரின் பெற்றோர் நம்பிக்கை

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் வடக்கு சியாச்சின் சிகரத்தில் அமைந்துள்ள ராணுவ நிலை பனிச்சரிவில் புதைந்தது. இதில் சென்னை பட்டாலியனைச் சேர்ந்த 10 ராணுவ வீரர்களும் பனி சரிவில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த முகாமில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த குடிசாதனப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சேகவுடு - பையம்மா தம்பதிரின் மகன் ராமமூர்த்தி (26) என்பவரும் இருந்துள்ளார். அவரும் இறந்ததாக வெளியான தகவலால் ராமமூர்த்தியின் பெற்றோர், அவரது மனைவி சுனிதா உட்பட கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் மணிவண்ணன் கூறும் போது, பனிச் சரிவில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமமூர்த்தியின் நிலை குறித்து தகவல் கிடைக்கவில்லை, என்றார்.

ராணுவ வீரரின் பெற்றோர் கூறும்போது, இதுவரை எவ்வித உறுதியான தகவலும் கிடைக்காததால், நிச்சயம் எனது மகன் உயிருடன் வருவார் என்கிற நம்பிக்கை உள்ளது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதலும், முழுமையான தகவல் கிடைக்கவில்லை என்றும் கூறினார், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x