Published : 18 Jul 2021 03:14 AM
Last Updated : 18 Jul 2021 03:14 AM

9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றியமைப்பு

சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் உட்பட 9 சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வேநேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நிர்வாக வசதிக்காக மாற்றம்

பயணிகள், நிர்வாக வசதிக்காக 9 சிறப்பு ரயில்களின் நேரம் சிறிய அளவில் மாற்றி அமைப்பட்டுள்ளது.

அதன்படி, விசாகப்பட்டினம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள் (எண். 02007/02869) வரும் 19-ம் தேதி முதல் காலை 7.50 மணிக்கு சென்னைக்கு வரும். புவனேஸ்வர் - சென்னை சென்ட்ரல் (02839) ரயில் வரும் 22-ம் தேதி முதல் காலை 7.50 மணிக்கும், பிலாஸ்பூர் - சென்னை சென்ட்ரல் (08231) சிறப்பு ரயில் இன்று முதல் காலை 7.50 மணிக்கும் வரும்.

திருப்பதி - சென்னை சென்ட்ரல் ரயில் (06096) இன்று முதல் இரவு 10.05 மணிக்கும், மைசூர் - சென்னை சென்ட்ரல் ரயில் (06022) காலை 6.45 மணிக்கும், ஜோலார்பேட்டை - சென்னை சென்ட்ரல் ரயில் (06090) காலை 9.10 மணிக்கும் சென்னையை வந்தடையும்.

இதேபோல, சென்னை சென்ட்ரல் - நிஜாமுதீன் ரயில் (06151) வரும் செப்டம்பர் 4-ம் தேதி முதல் காலை 6 மணிக்கும், சென்னை சென்ட்ரல் - நிஜாமுதீன் (02269) சிறப்பு ரயில் செப்டம்பர் 3-ம் தேதி முதல் காலை 6.45 மணிக்கும் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x