ராம்கோ ஆலையில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்

விருதுநகர் அருகே ராம்கோ சிமெண்ட் ஆலையில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடக்கி வைத்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு. அருகில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் எம்எல்ஏக்கள்.
விருதுநகர் அருகே ராம்கோ சிமெண்ட் ஆலையில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை தொடக்கி வைத்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு. அருகில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் எம்எல்ஏக்கள்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே ராம்கோ நிறுவனத்தில் ரூ.85 லட்சத்தில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் ராம்கோ சிமெண்ட் ஆலையில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, எம்எல்ஏக்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தைத் திறந்து வைத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கு ஏதுவாக ராம்கோ சிமெண்ட் ஆலை வளாகத்தில் கூடுதலாக ரூ.85 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராம்கோ சிமெண்ட் ஆலைவளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைநிறுவப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது விரிவுபடுத்தப்பட்ட ஆக்சிஜன் தயாரிக்கும் மையம் மூலம் நாளொன்றுக்கு 13,68,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்து,195 சிலிண்டர்களில் ஆக்சிஜன்நிரப்பி அரசு மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in