Published : 04 Feb 2016 01:09 PM
Last Updated : 04 Feb 2016 01:09 PM

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.339 கோடி அளிப்பு

தமிழக வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 338 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 503 ரூபாய் வழங்கியுள்ளனர்.

அந்த வரிசையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று (4.2.2016) தலைமைச் செயலகத்தில் சந்தித்து, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கினார்கள்.

1. லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (Larsen & Toubro Ltd.,) நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் 10 கோடியே 80 லட்சம் ரூபாய்.

2. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஆர்.கோடீஸ்வரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 4 கோடியே 18 லட்சத்து 82 ஆயிரத்து 12 ரூபாய்.

3. ஐடிபிஐ (IDBI) வங்கியின் முதன்மை பொது மேலாளர் மற்றும் மண்டல தலைவர் (தெற்கு) ரபிநாராயன் பாண்டா 1 கோடியே 25 லட்சம் ரூபாய்.

4. திருச்சிராப்பள்ளி, பாரத மிகுமின் நிறுவனத்தின் (BHEL) செயல் இயக்குநர் எஸ். கோபிநாத், பாரத மிகுமின் நிறுவனப் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 1 கோடியே 63 லட்சத்து 27 ஆயிரத்து 230 ரூபாய்.

5. பாங்க் ஆப் இந்தியா வங்கியின் செயல் இயக்குநர் ஆர்.ஏ. சங்கர நாராயணன் 1 கோடி ரூபாய்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 18 கோடியே 87 லட்சத்து 9 ஆயிரத்து 242 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (4.2.2016) முதல்வர் ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 338 கோடியே 77 லட்சத்து 73 ஆயிரத்து 503 ரூபாயாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x