தண்டவாளத்தில் கிடந்த டிராக்டர் டயர்: விழுப்புரம் அருகே ரயிலை கவிழ்க்க சதி?- ரயில்வே போலீஸார் விசாரணை

தண்டவாளத்தில் கிடந்த டிராக்டர் டயர்: விழுப்புரம் அருகே ரயிலை கவிழ்க்க சதி?- ரயில்வே போலீஸார் விசாரணை
Updated on
1 min read

விழுப்புரம் அருகே ரயில் பாதை யில் டிராக்டர் டயரை போட்டதால் கன்னியாகுமரி-ஹவுரா விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி - கொல்கத்தா ஹவுரா விரைவு ரயில் நேற்று முன்தினம் காலை கன்னி யாகுமரியில் இருந்து புறப்பட்டது. நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் அருகே சாலாமேடு ரயில்வே கேட் பகுதிக்கு வந்தபோது, திடீரென ரயில் இன்ஜினின் கீழ் பகுதியில் திடீர் சத்தம் கேட்டு, தீப்பிடித்து எரிய தொடங்கியது. ரயிலை நிறுத்தி பார்த்தபோது, டிராக்டரின் பின் சக்கர டயர் ஒன்று ரயில் இன்ஜின் மையப் பகுதியில் சிக்கியிருந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த ரயில்வே கேங்மேன் மற்றும் ஊழியர் கள் ரயில் இன்ஜினில் சிக்கியி ருந்த டயரை நீண்ட நேர போராட் டத்திற்குப் பின்னர் வெளியே எடுத்த னர். இதனையடுத்து, 50 நிமிட தாமதத்துக்குப் பிறகு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு இரவு 8.30 மணிக்கு சென்றது.

ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் ரயில்வே போலீஸார் சம்பவ இடத் தைப் பார்வையிட்டனர். சாலாமேடு ரயில்வே கேட் அருகே ஆளில்லாத பகுதியில் மர்ம நபர்கள் ரயில் பாதையில் டயரை போட்டிருந்தது தெரியவந்தது. டயரை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸார், ரயில் பாதையில் டயரை போட்டு சதி வேலையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in