அரியலூரில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள்: மரக்கன்றுகளை நட்ட அமைச்சர் சிவசங்கர்

அரியலூர் பெரியார் நகரில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைக்கும் பணியை மரக்கன்றுகள் நட்டுவைத்துத் தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
அரியலூர் பெரியார் நகரில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைக்கும் பணியை மரக்கன்றுகள் நட்டுவைத்துத் தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
Updated on
1 min read

அரியலூரில் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைக்கும் பணியைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சி, பெரியார் நகரில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான 60 சென்ட் இடத்தில், 7,000 மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் நட்டு குறுங்காடுகள் அமைக்கும் பணியைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (ஜூலை 17) தொடங்கி வைத்தார்.

அப்போது, "மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கப்படுவதால், பறவை இனங்கள் வாழ்வதற்கும், பறவை இனங்களைப் பாதுகாக்கவும், தங்களது இனங்களைப் பெருக்கிக்கொள்வதற்கும் வாய்ப்பாக இருக்கும். மாவட்டத்தில் உள்ள காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கப் பகுதிகளிலும் இவ்வகையான குறுங்காடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

நிகழ்ச்சியில், அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், தன்னார்வலர் பூமிநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in