

சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
சென்னை மாவட்ட வேளாண் பொறியியல் செயற் பொறியாளர் கட்டுப்பாட்டில் உள்ள அலுவல கங்களில் காலியாக உள்ள காவலர் காலிப்பணியிடங்களுக்கு சென்னை மாவட்டத்தை இருப்பிட மாகக் கொண்ட தகுதியான ஆண்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடங்களில் ஆதி திராவிடர் (முன்னுரிமை பெற்ற வர்), பிற்படுத்தப்பட்டோர் (முன்னு ரிமை அற்றவர்) மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர் (முன் னுரிமை பெற்றவர்), பொதுப்பிரி வினர் (முன்னுரிமை அற்றவர்) ஆகிய பிரிவினருக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடத்துக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்தவராகவும், 8-ம் வகுப்பு பூர்த்தி செய்தவராக வும், சைக்கிள் ஓட்டத் தெரிந்தவராக வும் இருக்க வேண்டும். வயது வரம்பு கடந்தாண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி நிலவரப்படி, 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடருக்கு 35 வயது, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32 வயது வரையும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, எண்.487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை- 35ல், அலு வலக பணி நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ, சாதாரண தபால் மூலமாகவோ வரும் பிப்ரவரி 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மேலும் விவ ரங்களுக்கு 044 2433 7238 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.