Published : 17 Jul 2021 03:12 AM
Last Updated : 17 Jul 2021 03:12 AM

சர்வதேச சாக்லேட் தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘குக் வித் சாக்லேட்’ சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி: ஜூலை 30 முதல் 3 நாட்கள் நடக்கிறது

அசோக்குமார்

சென்னை

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் வீடுகளிலேயே தனித்திருக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு பயன்படும் வகையில், சர்வதேச சாக்லேட் தினத்தை முன்னிட்டு, ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் சார்பில் சாக்லேட் செய்யக் கற்றுத்தரும் ‘குக் வித் சாக்லேட்’ சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி ஜூலை 30 முதல் 3 நாட்கள்நடைபெற உள்ளது.

ஜூலை 30, 31, ஆகஸ்ட் 1 ஆகிய நாட்களில் தினமும் மாலை 6 முதல்7 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, 40 ஆண்டுகால சமையல் அனுபவமிக்க புகழ்பெற்ற செஃப் அசோக்குமார் நடத்தவுள்ளார். இந்த ஆன்லைன் நிகழ்வில்,சாக்லேட் ஸ்பான்ஜ், சார்ட் கிரஸ்ட் பேஸ்ட்ரி, சோகோ சிப்ஸ் குக்கீஸ், சாக்லேட் சபயன் கட்டன், பிளாக் ஃபாரஸ்ட், ஒயிட் ஃபாரஸ்ட், சாக்லேட் டிரஃபிள் கேக், பட்டர் ஸ்காட்ச்பிரலைன் உள்ளிட்ட சாக்லேட் தயாரிப்புகள் குறித்து விளக்கப்படும். கேட்டரிங் படிக்கும் மாணவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். வீட்டிலேயே சுவையான சாக்லேட் செய்வதற்கான நுணுக்கங்களை அனைவருக்கும் கற்றுத்தருவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

இதில் பங்கேற்க லேப்டாப் அவசியம். பங்கேற்க விரும்புபவர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.249/- செலுத்தி https://rb.gy/cxo6kp என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வின் கிச்சன் பார்ட்னராக கோவை ஹோட்டல் கிஸ்கால் கிராண்ட், தயாரிப்பு பார்ட்னராக கோவை அபிராமி எண்டர்பிரைசஸ் நிறுவனமும் இணைந்துள்ளன. கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x