

கிருஷ்ணகிரி மாவட்டம் காப்புக் காடுகளில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் கடந்த 4 மாதங் களுக்கு முன்பு வேலூர் மாவட்ட விவசாய பயிர்ளை சேதப்படுத்தின.
இந்நிலையில், நாட்றம்பள்ளி அடுத்த செட்டேரி அணை அருகே உள்ள ‘தைலம் பிளாட்’ என்ற இடத்தில் அப்பகுதி மக்கள் நேற்று காலை சென்றபோது, ஒரு தென்னந் தோப்பில் 2 காட்டு யானைகள் உயிரிழந்து கிடந்தன. தென்னந் தோப்பைச் சுற்றிலும் அமைக்கப்பட் டிருந்த உயர் அழுத்த மின்சார வேலியில் சிக்கி யானைகள் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வனத்துறை அலு வலர் பரமசிவம், வனக்காவலர் மகேந்திரன் உட்பட 5 அலுவலர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கிருஷ்ணகிரி வனத்துறையினரும், கால்நடை மருத் துவர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு யானைகளுக்கு அங்கேயே பிரேதப் பரிசே ாதனை செய்யப்பட்டது.
நிலத்துக்கு மின்சார வேலி அமைத்தது தொடர்பாக வாணி யம்பாடியைச் சேர்ந்த நில உரி மையாளர் அப்துல்லா மற்றும் நிலத்தை குத்தகைக்கு எடுத்த விவசாயி பெருமாள் ஆகியோரி டம் கிருஷ்ணகிரி மாவட்ட வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.