

பல்வேறு வழக்குகளில் தொடர் புடைய பிரபல குற்றவாளி ரவி என்கிற காதுகுத்து ரவியின் ரூ.11 கோடியே 68 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
நிலமோசடி, ஆள்கடத்தல், கொலை, கட்டப்பஞ்சாயத்து உள் ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ரவி என்கிற காதுகுத்து ரவி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு கதிரவன் என்பவரின் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டார். அப்போது இவரிடம் இருந்து ரூ.74 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை மத்திய அமலாக்கத் துறை முடக்கம் செய்தது.
இந்நிலையில், இவர் தனது பெயரிலும் தனது மகன் பெயரிலும் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாக வந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை விசா ரணை நடத்தியது. இதில், பூந்தமல்லி பஞ்சாயத்துக்குட்பட்ட கூத்தம்பாக்கம், சோழிங்கநல்லூர் மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் அவர் சொத்துகளை வாங்கி குவித்திருப்பது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.11 கோடியே 68 லட்சம் ஆகும். இவற்றை அமலாக்கத்துறை முடக்கியது.