Published : 17 Jul 2021 03:14 am

Updated : 17 Jul 2021 08:56 am

 

Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 08:56 AM

அழகர்கோயில் ஆடி திருவிழா கொடியேற்றம்

alagar-koyil-aadi-festival
அழகர்கோயிலில் நேற்று ஆடித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. (உள்படம்) தேவி, பூதேவியருடன் சுந்தரராஜப்பெருமாள்.படங்கள் எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை

மதுரை மாவட்டம் அழகர் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத் துடன் தொடங்கியது.

அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் கோயில் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடிப்பர்.


இத்திருவிழாக்கள் கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதியின்றி கோயில் உள்பிரகாரத்தில் நடத்து வதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நேற்று அழகர் கோவிலில் காலை 7.15 மணிக் குமேல் 8.15 மணிக்குள் கொடி யேற்றம் நடைபெற்றது. பட்டர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடி யேற்றம் நடைபெற்றது.

இதில் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை. பின்னர் 9 மணிக்கு மேல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது சுந்தரராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தினமும் காலையில் சுந்தர ராஜப்பெருமாள் தேவி, பூதே வியருடன் தங்கப்பல்லக்கில் எழுந் தருள்வர். மாலையில் தினமும் ஒரு வாகனத்தில் எழுந்தருள்வர். அதன்படி 2-ம் நாள் சிம்ம வாகனம், 3-ம் நாள் அனுமார் வாகனம், 4-ம்நாள் கெருட வாகனம், 5-ம்நாள் சேஷ வாகனம், 6-ம் நாள் யானை வாகனம், 7-ம் நாள் புஷ்ப சப்பரம், 8-ம் நாள் குதிரை வாகனத்தில் எழுந்தருள்வர். 9-ம் நாள் ஜூலை 24-ம் தேதி சனிக்கிழமை காலை தேரோட்டம் நடத்துவதற்கு தடை உள்ளதால் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கோயில் உள்பிரகாரத்தில் சட்டத்தேரில் எழுந்தருள்வர். அன்று மாலை புஷ்பப் பல்லக்கு நடைபெறும். பத்தாம் நாள் தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுறும்.

கோயில் உதவி ஆணையர் தி.அனிதா தலைமையிலானோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


அழகர்கோயில்ஆடி திருவிழாஆடி திருவிழா கொடியேற்றம்Alagar Koyil Aadi FestivalAlagar KoyilAadi Festival

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x