அதிமுகவுக்கு விசுவாசியாக இருப்பேன்: சட்டப்பேரவை முன்னாள் தலைவர் கருத்து

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அதிமுகவுக்கு விசுவாசியாக இருப்பேன் என்று, சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காததால், ப.தனபால், திமுகவில் இணைவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், அவிநாசியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,

"சமூக வலைதளங்களில் தவறானதகவல் பரவி வருவது கண்டனத்துக்குரியது. 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய கால கட்டத்தில், எனது மாணவப் பருவத்தில் இருந்தே அதிமுகவில் இணைந்து பணிபுரிந்து வருகிறேன். எனது 45 ஆண்டு கால அரசியல் வரலாறு குறித்து அறியாதவர்கள், அத்தகைய வதந்தியை பரப்பி விட்டுள்ளனர்.

எனது பொது வாழ்க்கை அமைதியானது. எந்தசூழ்நிலையிலும், எந்தவொரு மாற்றத்தையும் விரும்பாதவன் நான். எந்தப் பதவியையும் விரும்பாதவன். அதிமுகவில் 7 முறை சட்டப் பேரவை உறுப்பினர், அமைச்சர், சட்டப்பேரவைத் துணைத் தலைவர், சட்டப்பேர வைத் தலைவர் உள்ளிட்ட வாய்ப்பு களை வழங்கியவர் ஜெயலலிதா. இவ்வளவு பதவிகளை கொடுத்து, அதிமுக என்னை பெருமைப் படுத்தியிருக்கிறது. எனவே, அதிமுகவுக்கு விசுவாசியாக இருப்பேன்" என்றார்.

எனது 45 ஆண்டு கால அரசியல் வரலாறு குறித்து அறியாதவர்கள், வதந்தியை பரப்பி விட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in