

பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலிலும் 3-வது அணி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் முதல் இலக்கு. அதற்காக தேமுதிக, பாமக தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.
அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசுவீர்களா என திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணி ஆகிவற்றுடன் மட்டுமே எங்களால் கூட்டணி வைக்க முடியாது. மற்ற கட்சிகள் எதுவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அறிவிக்கவில்லை. எனவே, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச மாட்டோம் என்றோ, அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றோ மறுக்க மாட்டேன்.
கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பாஜக மாநிலத் தலைவர்களுக்கு இல்லை. அதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். இவ்வாறு இல.கணேசன் கூறினார்.