இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: திமுக வலியுறுத்தும் என, கனிமொழி எம்.பி. உறுதி

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.யை  இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களின் பிரதிநிதிகள் சந்தித்து மனு அளித்தனர்.  		     படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.யை இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களின் பிரதிநிதிகள் சந்தித்து மனு அளித்தனர். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

இலங்கை தமிழர்களுக்கு இந்தியகுடியுரிமை கிடைக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என, கனிமொழிஎம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 9 இலங்கை தமிழர் அகதிகள் முகாம்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கனிமொழி எம்.பி.யை சந்தித்து பேசினர்.

பின்னர் கனிமொழி எம்.பி.செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென் மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் முகாம்களின் பிரதிநிதிகள் தங்களது வாழ்வாதாரபிரச்சினைகள் தொடர்பாக மனுஅளித்தனர். ஏற்கெனவே தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி இலங்கை தமிழர் முகாமுக்குசென்றபோது, அவர்கள் சந்திக்கும்பல்வேறு பிரச்சினைகளை அறிந்தேன். இது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். இலங்கை தமிழர்களுக்கு தேவையான அனைத்துவசதிகளும் செய்து கொடுக்கப்படும் என, முதல்வர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய குடியுரிமைவழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர். தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என, திமுக வலியுறுத்திவருகிறது. இது தொடர்பாக தொடர்ந்து வலியுறுத்துவோம். சிலர் தங்களது சொந்த நாட்டுக்கு செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனையும் பரிசீலிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன்பிடி மசோதா மீனவர் நலனுக்குஎதிராக உள்ளது. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக எனது கருத்துகளை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in