

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை கிராமத்தில் மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி கட்டு வதற்காக அருகில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான விநாயகர் கோயில் இடத்தை மோசடி ஆவணங்கள் மூலம் மு.க.அழகிரி வாங்கியிருப்ப தாக சிவரக்கோட்டை விவசாயி ராமலிங்கம் அரசுக்கு தொடர்ந்து புகார் மனுக்கள் அனுப்பிவந்தார்.
நீண்டகாலமாக கிடப்பில் இருந்த இந்தப் புகாரை கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் மதுரை ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் கொடுத்தார் ராமலிங்கம். இந் நிலையில், அறநிலையத் துறை துணை ஆணையர் சுரேந்திரன், உதவி ஆணையர் கருணாநிதி, ஆய்வாளர் சாந்தா மற்றும் அதி காரிகள் திங்கள்கிழமை சிவரக் கோட்டை கிராமத்துக்கு வந்தனர். ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப் படும் நிலத்தில், இது அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகையை யும் நட்டனர்.
பின்னர் கிராம நிர்வாக அலு வலகத்துக்குச் சென்ற அவர்கள், அங்கிருந்த வருவாய்த் துறை அலுவலர்களிடம் இது குறித்து விசாரித்தனர். புகார் கொடுத்த ராம லிங்கத்தை அழைத்து, எழுத்துப் பூர்வமாக வாக்குமூலம் பெற்றனர்.
அந்த வாக்குமூலத்தில் சிவரக் கோட்டை கிராம சர்வே எண் 175/13 விநாயகர் கோயில் பெய ரில் உள்ள 44 சென்ட் நிலம் மு.க.அழகிரியின் தயா பொறியி யல் கல்லூரிக்கு எவ்வாறு மாற்றப் பட்டது என்பதை விரிவாக கூறி யுள்ளார். அதுதொடர்பான ஆவ ணங்களையும் ஒப்படைத்தார்.
விசாரணை குறித்து அறநிலை யத் துறை உதவி ஆணையர் கருணாநிதியிடம் கேட்டபோது, கோயில் நிலம் அபகரிக்கப்பட்ட தாக பத்திரிகைகளில் வந்த செய்தியின் அடிப்படையில் கள ஆய்வு செய்தோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
திறக்கப்படாத கல்லூரி!
தயா பொறியியல் கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று மாணவர் சேர்க்கைக்கு இதுவரையில் அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து அழகிரி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது