Last Updated : 26 Feb, 2016 09:30 AM

 

Published : 26 Feb 2016 09:30 AM
Last Updated : 26 Feb 2016 09:30 AM

ஊதுறாய்ங்கப்பா ஊர்க்காரய்ய்ங்க!

போற போக்குல பெருசா பேசி திகில் கெளப்புறதுல நம்ம ஊர்க்காரய்ய்ங்க பக்கத்துல யாருமே நிக்க முடியாதுங்கறது ஒலகம் அறிஞ்ச உண்ம.

அடுத்த பஸ் ஸ்டாப்புல நடந்த ஆக்சிடண்ட கூட அம்புட்டு பூதாகரமா சொல்லி, காது குடுத்துக் கேட்குறவன் ஜன்மத்துக்கும் சைக்கிள்கூட ஓட்ட விடாம பண்ணிப்புடுவாய்ங்க..

எலக்‌ஷனே வந்துருச்சு.. பேச்சு ஒரு எடத்துல நிக்குமா?

கட்சித் தலைவருங்களோடல்லாம் கட்டிப் புடிச்சு பழகுற மாரியே கப்சா விட ஆரமிச்சுட்டாய்ங்கப்பா.. தாங்க முடியல..

இப்பத்தான் எதச் சொன்னாலும்.. சின்னதா ஒரு பதிவு பண்ணிடுங்க.. ஷேர் ஆகும்.. லைக் பண்ணுவாய்ங்கன்னு சொல்றாய்ங்கள்ல.. அதான் நாமளும் ‘வரலாற்று’ப் பதிவுல எறங்கிட்டோம்..

விசயகாந்த் தல தான் ஊர்ப்பக்கம் ரொம்ப உருளுதாம்.

‘எலே.. மாநாட்டுல கேப்டன் பேசு னத கவனிச்சியா?’

‘கிங்கு கிங்குனு சொன்னது மட்டுந் தானல்ல புரிஞ்சுச்சு.. அவய்ங்க கட்சிக் காரய்ங்களே இதப் பத்தி பேசுனாலே சிரிச்சுக்கிட்டே கழட்டிக் கிறாய்ங்களே..’

‘கோயம்பேடு கட்சி ஆபீசு பக்கத் துலியே நம்மூர்க்காரு ஒருத்தர் கட வச்சிருக்கார். அவருக்கு எல்லாந் தெர்யுது -

டிஎம்கேகிட்ட அதிக சீட்டு டிமாண்ட் பண்றதுக்காகத்தான் கேப்டன் அப்டி குழப்பலா பேசுனாராம். எப்டியாச்சும் கெத்து காட்டி ‘சி’ மேட்டரு, ‘சீ’ மேட்டர முடிச்சுக்கிட்டுத்தான் பேச் சயே ஆரமிப்பாங்களாம். பிஜேபிலயும் நெறய ஆஃபராம்.. சென்ட்ரல் மினிஸ்டர் போஸ்ட் தர்றேன்றாங்களாம். மச்சுனனுக்கு வேணாம். மகனுக்கு தாங்கன்னு கேப்டன் சொல்லிட்டாராம்.

லாஸ்ட் டைமே ‘100சி’ வரைக்கும் போச்சுதுனு சொன்னாய்ங்கப்பா.. 100 சீட்டு தர ம.ந.கூகாரங்க ரெடியா இருக்காங்களாம்.. கேப்டன விட அண்ணியும் அவங்க தம்பியும் கறாரா இருக்கறதுனாலதான் கூட்டு சட்டுனு செட்டாக மாட்டேங்குதாம்.. எந்த தலவரு போய்ப் பாத்தாலும் கேப்டன் புடி குடுக்கவே மாட்டேங்கறாராம். ’நாங்க ஜெயிக்கணும்.. ஒங்ககூட சேந்தா ஜெயிக்க முடியுமா..நீங்களே சொல்லுங்க’னு கேட்டு மடக் கிப்புடுறாராம்.. வந்தவங்களும் வணக்கம் போட்டுட்டு கெளம்பிட றாங்களாம்!

லேட்டஸ்டா ஒண்ணு சொல்றாங் கப்பா.. கெஜ்ரிவாலுகூட கேப்டன் ரொம்ப நேரம் பேசுனாராம். ஜெயிக் கிற டெக்னிக் சொல்லித் தர்றேன்னு கெஜ்ரிவால் சொன்னத வச்சு, முடிவ மாத்திக்கிட்டாராம். புதுசா கூட்டணி ஆரமிச்சுடலாம்னு ஜரூராயிட்டாராம்..’

‘எலேய்.. எந்திரிங்கடா.. கேக்கிற துக்கு எவனாவது கெடச்சுட்டா வாய்க்கு வந்தத பேசுவிங்களே.. ‘சி’ பத்தி பேசுற மூஞ்சிங்கள பாரு.. ‘

நடுவுல புகுந்த ‘நாட்டாமை’யால் பேச்சு நின்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x