

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்த லில் தமாகா சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 10 முதல் 12-ம் தேதி வரை மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 234 தொகுதிகளுக்கும் 4 ஆயிரத்து 886 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அவர்களிடம் வரும் 20 முதல் 23-ம் தேதி வரை சென்னை தியாகராய நகர் சாரங்கபாணி தெருவில் உள்ள பத்மாவதி திருமண மண்டபத்தில் காலை 9 முதல் மாலை 6 மணி வரை நேர்காணல் நடைபெறும். 20-ம் தேதி காலையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மாலையில் சிவ கங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி. 21-ம் தேதி காலையில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மாலையில் நாமக்கல், சேலம், திண்டுக்கல், 22-ம் தேதி காலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணா மலை, மாலையில் விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், 23-ம் தேதி காலையில் திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், கரூர், மாலையில் அரியலூர், பெரம் பலூர், தஞ்சை, நாகை, திரு வாரூர், சென்னை என மாவட்ட வாரியாக நேர்காணல் நடை பெறும். இவ்வாறு ஜி.கே.வாசன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.