

மணலூர்பேட்டை அருகே மனைவி, மாமியாரை கொன்ற ஆட்டோ ஓட்டுநர் தப்பி ஓடினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அருகே முருக்கம் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா (50). இவரது மகள் மகாலட்சுமி (33). மகாலட்சுமியை விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தேவியாகரம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான முருகன் என்பவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
முருகன்- மகாலட்சுமி தம்பதியி னருக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் முருகனுக்கும், மகாலட்சுமிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமி தன் குழந்தைகளுடன் தாய் வீடான முருக்கம்பாடிக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை முருகன் தனது மாமியார் வீட்டிற்குச் சென்று, கடப்பாரையால் மனைவி மற்றும் மாமியார் மற்றும் மகள் மோனிஷா (11) ஆகியோரை தாக்கி விட்டு தப்பியுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா, மகாலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மோனிஷா தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு கிறார். இத்தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் ஜியா வுல்ஹக் தலைமையிலான மணலூர் பேட்டை காவல் நிலையத்தினர வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.