சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றும்: செ.கு.தமிழரசன் நம்பிக்கை

சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றும்: செ.கு.தமிழரசன் நம்பிக்கை
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் எம்எல்ஏ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, உளுந்தூர்பேட்டையில் நேற்று அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இந்திய குடியரசு கட்சி அதிமுக கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும். இந்த கூட்டணி தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். கடந்த காலத்தில் நடந்த தலித் விரோத திமுக ஆட்சியை மக்கள் மறக்கவில்லை. தேர்தலில் யார் வெற்றி பெறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே தீவிரமாக பணியாற்றி மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்க உறுதுணையாக இருப் போம்.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ளவர்களுக்கே அந்த கூட்டணி பாதகமாக உள்ளது. கடந்த தேர்தல்களில் திமுக, மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அந்த கட்சிகள் புதிய முயற்சியாக மக்கள் நலக் கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணக்கு மாற்றுமாறு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். அப்படி என்றால் மத்திய பாஜக அரசு, அந்த அளவுக்கு நேர்மையாக சிபிஐயை பயன்படுத்தி வருகிறதா? இந்த வழக்கில், சிபிசிஐடி போலீஸார் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது, கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் மங்காப்பிள்ளை மற்றும் நிர் வாகிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in