

வரும் 16-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏ.,க்கள் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 16-7-2021 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம், மேகேதாட்டு அணைப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், கரோனா நிலவரம் ஆகியன குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், திமுகவின் நிலைப்பாடுகள் குறித்து எம்.பி.க்களுடன் ஆலோசனை செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.