Published : 23 Feb 2016 08:19 AM
Last Updated : 23 Feb 2016 08:19 AM

இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோயால் 6 லட்சம் பேர் உயிரிழப்பு: அப்போலோ மருத்துவமனை செயல் துணைத்தலைவர் தகவல்

இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோயால் 6 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்று அப் போலோ மருத்துவமனை செயல் துணைத்தலைவர் பிரீதா ரெட்டி தெரிவித்தார்.

அப்போலோ மருத்துவமனை, தேசிய புற்றுநோய் மையம் (யுஎஸ்ஏ) இணைந்து, ‘இந்திய பெண்களை பாதிக்கும் புற்று நோய் தடுப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரை யாடல் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நேற்று நடந்தது.

அப்போலோ மருத்துவமனை செயல் துணைத்தலைவர் பிரீதா ரெட்டி கருத்தரங்குக்கு தலைமை தாங்கினார். தேசிய புற்றுநோய் மையத்தின் (சுகாதாரம்) இயக்குநர் எட்வர்டு ட்ரிம்பிள் முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை செய லாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, அடையாறு புற்றுநோய் மருத்துவ மனை தலைவர் வி.சாந்தா ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.

இந்த கருத்தரங்கில் இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாளிதழ்களைச் சேர்ந்த புற்று நோய் சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டு மார்பக புற்று நோய் ஆராய்ச்சி, புதிய சிகிச்சை முறைகள், பரம்பரையாக பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய், மார்பகப் புற்றுநோய் பாதிப்புகள் பற்றி விவாதித்து தகவல்களை பரிமாறிக்கொண் டனர்.

அப்போலோ மருத்துவ மனை புற்றுநோய் நிபுணர் டி.ராஜா, பெண்களுக்கான புற்றுநோய் சிகிச்சை குறித்த கலந்துரையாடலை நடத்தினார். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான அவசியத்தை வலியுறுத்தியும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இந்த கருத்தரங்கில் அப்போலோ மருத்துவமனை செயல் துணைத்தலைவர் பிரீதா ரெட்டி பேசியதாவது:

இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோய்க்கு 6 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் ஆகியவை அதிகரித்து வருகின்றன. சமீப காலமாக இளம் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். புற்றுநோய் வராமல் தடுப்பது மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ள இந்த கருத்தரங்கம் வாய்ப்பாக அமைந்துள்ளது. புற்றுநோய் கட்டிகளுக்கு ரோபோடிக் ரேடியோ சர்ஜரி முறையை இந்தியாவில் முதல்முறையாக அப்போலோ மருத்துவமனை அறிமுகம் செய்தது. அப்போலோ புற்றுநோய் மருத்துவமனையில் பெண்களுக்காக முழுமையான புற்றுநோய் சிகிச்சை துறை தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் வி.சாந்தா பேசும்போது, “புற்று நோய் முற்றிய நிலையிலேயே 60 சதவீதம் பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். ஆரம்ப கட்டத் திலேயே சிகிச்சை அளித்தால் புற்றுநோயை முழுவதுமாக குணப்படுத்திவிடலாம். புற்று நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x