மருத்துவ துறையில் காலியாக உள்ள 1,202 சார்நிலை பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

மருத்துவ துறையில் காலியாக உள்ள 1,202 சார்நிலை பணியிடங்களுக்கு நேரடி நியமனம்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
Updated on
1 min read

தமிழக மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,202 சார்நிலை பணியிடங்களுக்கு தகுதியானவர் கள் விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:

மருத்துவப் பணியாளர் தேர் வாணையம் (எம்ஆர்பி) மூலம் தமிழக மருத்துவத் துறையில் சார்நிலைப் பணியில் காலியாக உள்ள 1,202 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர்.

இஇஜி / இஎம்இ டெக்னீசியன் 12 இடங்கள், ஆடியோ மெட்ரீசியன் 17 இடங்கள், பிரோஸ்தெடிக் கிராப்ட்ஸ்மேன் 64 இடங்கள், ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் 18 இடங்களுக்கு வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும்.

பார்மசிஸ்ட் 333 இடங்கள், டார்க் ரூம் அசிஸ்டென்ட் 234 இடங்கள், லேப் டெக்னீசியன் (கிரேடு-2) 524 இடங்களுக்கு வரும் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் >www.mrb.tn.gov.in என்ற மருத்துவப் பணியாளர் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ் வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in