செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

செங்கல்பட்டு வளாகத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க, பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதியளிக்க அதிக வாய்ப்புஉள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ள நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு தொடங்க வேண்டும். இல்லையென்றால் தடுப்பூசி தயாரிப்பதற்கான அனுமதியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசுவலியுறுத்தி வருகிறது. ஆனால், தனியார் பங்களிப்புடன் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “விரைவில் டெல்லி செல்லும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசி, 11 மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான அனுமதி, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கரோனா தடுப்பூசி உற்பத்தி, கரோனா தொற்று தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளனர். செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியை மேற்கொள்ள கோவாக்சின் தயாரிக்கும் பாரத் பயோடெக் உட்பட 3 நிறுவனங்கள் தயாராகஇருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பாரத் பயோடெக்நிறுவனத்துக்கு அனுமதி அளிக்க அதிக வாய்ப்புள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in