

சென்னை சங்கர நேத்ராலயாவில் மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்புக்கு ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சங்கர நேத்ராலயா வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
‘தி சங்கர நேத்ராலயா அகாடமி’ மருத்துவமனை மேலாண்மை பற்றிய சான்றிதழ் படிப்பை தொடர்ந்து வழங்கிவருகிறது. இந்த படிப்பு, மருத்துவமனை மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை துறைகளில் பணியாற்றும் இளநிலை, மத்திய நிலை ஊழியர்களுக்கு பெரிதும் கைகொடுக்கும். எனவே அவர்களது வசதிக்காக வார இறுதி நாளான சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கடைசி நாள் ஜூன் 10
இந்த படிப்பில் கம்யூனிகேஷன் திறன், சுகாதார சேவையில் மனிதவள மேலாண்மை, மருத்துவ மனைகளுக்கான தர அங்கீகார முறைகள் போன்றவை பயிற்றுவிக் கப்படும். இந்த வகுப்புகள் மூலம் மருத்துவ நிர்வாக சிக்கல்கள், மேலாண்மை கருத்துக்களை புரிந்துகொள்ள முடியும்.
இந்தப் படிப்புக்கான விண்ணப் பங்கள் தற்போது விநியோகிக் கப்பட்டு வருகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வகுப்புகள் 21-ம் தேதி தொடங்கும்.
இவ்வாறு சங்கர நேத்ராலயா தெரிவித்துள்ளது.