தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிக்கு ஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனம் அதிகாரப்பூர்வ பங்குதாரராக அறிவிப்பு

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிக்கு ஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனம் அதிகாரப்பூர்வ பங்குதாரராக அறிவிப்பு
Updated on
1 min read

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டிக்கு ஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனம் அதிகாரப்பூர்வ பங்குதாரராக அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீராம் கேப்பிடல் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஸ்ரீராம் குழுமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கேப்பிடல் கடன் வழங்கல், ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது இந்நிறுவனம் 2016-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் டிஎன்பிஎல் போட்டிக்கு அதிகாரப்பூர்வ பங்குதாரராக செயல்படுகிறது.

இந்த போட்டி வரும் ஜூலை 19-ம் தேதி தொடங்குகிறது. சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெறும். இறுதிப்போட்டி வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடக்கவுள்ளது. மொத்தம் 28 லீக் போட்டிகள், 4 பிளேஆஃப் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஸ்ரீராம் கேப்பிடல் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டி.வி.ரவி கூறும்போது, “இக்கட்டான பேரிடர் காலத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிகளைக் காண ரசிகர்கள் நேரில் வர முடியாது என்றாலும், அவர்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசிக்கலாம். இந்த போட்டி தமிழகத்தின் கடைகோடியில் உள்ளவர்களின் திறமைகளையும் வெளிக்கொண்டுவர சிறந்த வாய்ப்பாக அமையும்” என்றார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ராமசாமி கூறும்போது, “இந்த கடினமான காலத்தில் இப்போட்டிக்கு உதவுவதற்காக ஸ்ரீராம் குழுமத்துக்கு நன்றி” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in