

மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயி லில் நேற்று அதிகாலை பூஜை களில் பங்கேற்று அம்மனை தரிசிக்க வெளி மாநில பக்தர்கள், தமிழகத்தின் பிற மாவட்ட பக்தர் கள், சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் திரண்ட வண்ணம் இருந் தனர். அப்போது திடீரென்று காரில் சசிகலா வந்து இறங்கி னார். அவரது வருகையை போலீ ஸாரும், கோயில் அதிகாரிகளும் ரகசியமாக வைத்திருந்தனர். அவரது வருகையை முன்கூட்டியே அறிந்ததால் கோயில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் ஊழியர்கள் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்திருந்தனர்.
சசிகலாவை இணை ஆணையர் நடராஜன் மற்றும் ஊழி யர்கள் கோபுர வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றனர். மீனாட்சியம்மன் கோயிலில் காலை 7 மணிக்கு வழக்கமாக அம்மனுக்கு காலசந்தி விழா பூஜை நடைபெறும். இந்த பூஜைக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு திரை விலக்கப்படும்.
நேற்று சசிகலா வருகையால் இந்த பூஜை தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. பூஜை தொடங் கியவுடன் அம்மன் சன்னதிக்கு வந்த சசிகலா அங்கு தரிசனம் செய் தார். பின்னர் பழநி கோயிலுக்கும் அவர் சென்று வழிபட்டார்.