Last Updated : 13 Jul, 2021 03:13 AM

 

Published : 13 Jul 2021 03:13 AM
Last Updated : 13 Jul 2021 03:13 AM

‘திராவிட நாடு’, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்லும் வரை ‘கொங்குநாடு’ என்று சொல்வோம்: யாதவ மகாசபை தேசியத் தலைவர் தேவநாதன் யாதவ் திட்டவட்டம்

சென்னை

‘திராவிட நாடு’, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்லும் வரை ‘கொங்கு நாடு’ என்று சொல்லிக் கொண்டே இருப்போம் என்று யாதவ மகாசபை தேசியத் தலைவரும், இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான தேவநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த சிறப்பு பேட்டி:

‘கொங்கு நாடு’ சர்ச்சை குறித்துகாட்டமாக கருத்து தெரிவித்துள்ளீர்கள். அது அரசியலில் தாக்கம் ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?

‘கொங்கு நாடு’ என்ற கோரிக்கை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. ஆனால், ‘திராவிடநாடு’, ‘ஒன்றிய அரசு’ , தனித் தமிழ்நாடு என்றெல்லாம் பிரிவினை உள்நோக்கத்துடன் பேசி வருபவர்களுக்கு பதிலடியாக ‘கொங்கு நாடு’ கோரிக்கை இருக்கும். கொங்கு நாடு, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, நாஞ்சில் நாடு என்பதெல்லாம் இந்தியாவில் இருந்தவை. இல்லாத திராவிட நாடு என்பதை சொல்லிக் கொள்ளும்போது, ஏற்கெனவே இருந்த ‘கொங்கு நாடு’ என்று சொல்வதில் தவறு இல்லை. அவர்கள் ‘திராவிட நாடு’ என்று சொல்லும் வரை, நாங்கள் ‘கொங்கு நாடு’ என்று சொல்லிக் கொண்டே இருப்போம்.

‘ஒன்றிய அரசு’ என்று சொல்வது அவ்வளவு பெரிய குற்றமா? மாநில சுயாட்சி என்ற பொருள் அடங்கியிருப்பதால்தான் அதைசொல்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாரே?

‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதன் நோக்கம் தவறானது. திமுக கேட்கும்மாநில சுயாட்சி என்பதன் நோக்கமும் வேறு. திமுக நிறுவனர் அண்ணாவே,சாத்தியமற்றது என்று கைவிட்டதை இவர்கள் திரும்ப ஆரம்பிக்கிறார்கள்.

கொங்கு நாடு கோரிக்கை பிரிவினை வாதம் என்று கே.பி.முனுசாமி, கே.எஸ்.அழகிரி, கனிமொழி ஆகியோர் கண்டித்துள்ளனரே?

நிர்வாக வசதிக்காக மாநில அரசுகள் பெரிய மாவட்டங்களை பிரிக்கின்றன. பெரிய மாநிலங்கள் பிரிக்கப்படுவதும் அதுபோன்றதுதான். புதிய மாநிலங்கள் உருவாக்கப்படுவது பிரிவினை வாதம் என்றால்தமிழ்நாடு என்ற மாநிலமே உருவாகியிருக்க முடியாது. சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்ததுதானே தமிழ்நாடு. திமுக அங்கம் வகித்தவாஜ்பாய் ஆட்சியில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் ஆகியபுதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. கடைசியாக ஆந்திராவில் இருந்து தெலங்கானா உருவானது.மக்கள்தொகை அதிகமானால் புதிய மாநிலங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை இப்போதே 5 கோடியை தாண்டிவிட்டது. இது 10 கோடியாக அதிகரித்தால், வருங்காலத்தில் தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் சூழல் உருவாகலாம்.

மக்களிடம் இருந்து கோரிக்கை வராதபோது, ‘கொங்கு நாடு’ தனி மாநிலம் கேட்பது மக்களை திசைதிருப்பும் செயல் என்று திமுக கூட்டணிகள் விமர்சிக்கிறதே?

நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல்விலை குறைப்பு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுகதான், மக்களின் கவனத்தை திசை திருப்ப‘ஒன்றிய அரசு’ என்கிறது. கொங்கு நாடு என்பது ஏற்கெனவே சொல்லப்பட்டு வருவதுதான். கொங்குநாடுமக்கள் தேசியக் கட்சி என்று திமுககூட்டணியில் ஒரு கட்சியே இருக்கிறது. அதன் தலைவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுஎம்எல்ஏவாக இருக்கிறார். 1996 முதல்2014 வரை இடையில் சில ஆண்டுகள் தவிர்த்து மத்திய அரசில் திமுகஅங்கம் வகித்தது. அப்போதெல்லாம் ‘ஒன்றிய அரசு’ என்று திமுக சொல்லவில்லை. மக்களை திசைதிருப்புவது திமுகதான். நாங்கள் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x