

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், காவல் துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் முதல், அனைத்து காவல் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சென்னையில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தேர்தல் முடிந்து திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் மீண்டும் இடமாற்றம் செய்யப்படாமல் இருப்பதாக காவல் ஆய்வாளர்கள் ஆதங்கம் அடைந்து வந்தனர். இந்நிலையில், சட்டம்- ஒழுங்கு, குற்றம், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த 179 பேர், போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த 35 பேர் என மொத்தம் 214 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.