Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திருநங்கை, திருநம்பியாக மாறுவதற்கான அறுவை சிகிச்சைகள் தொடக்கம்

கோப்புப்படம்

மதுரை

மதுரை அரசு ராஜாஜி மருத்து வமனையில் வியாழக்கிழமை தோறும் மூன்றாம் பாலின சிறப்பு மருத்துவப்பிரிவு செயல்படத் தொடங்கியுள்ளது. திருநங்கை யாக, திருநம்பியாக மாற விரும்பு கிறவர்கள், அதற்கான அறுவை சிகிச்சைகளை இலவசமாக இங்கு எடுத்துக் கொள்ளலாம்.

மூன்றாம் பாலினத்தவர்க ளுக்கான (திருநங்கை மற்றும் திருநம்பி) பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவப் பிரிவு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சைக்கான புற நோயாளிகள் பிரிவு அறை எண் 4-ல் அனைத்து வியாழக் கிழமைகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை இயங்குகிறது.

இந்த சிகிச்சைப் பிரிவு குறித்து டீன் ரத்தினவேலு கூறியதாவது: அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதல்படி இந்த சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. 3-ம் பாலினத்தவர்களுக்கான அனைத்து சிறப்பு பிரிவுகளும் ஒரே இடத்தில் செயல்படுகிறது.

இச்சிகிச்சை பிரிவில் உளவியல் ஆலோசனை, ஹார்மோன்கள் சிகிச் சை, பாலின மாற்றுதல் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். திருநங்கையாக மாற விரும் புபவர்களுக்கு ஆண் குறி நீக்கம், செயற்கை மார்பகம் பொருத்துதல், திருநம்பியாக மாற விரும்புவர்களுக்கு கர்ப்பப்பை நீக்கம், மார்பகங்கள் நீக்குதல் போன்ற அறுவை சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும்.

பாலின மாற்று அறுவை சிகிச்சையானது நிரந்தரமானது மற்றும் மாற்றத்தக்கது அல்ல. மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி 18 வயது நிரம்பிய பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்புபவர்கள் உளவியல் மருத்துவ ஆலோச னையை குறைந்தது மூன்று மாதங்களும், ஹார்மோன் மருத்துவச் சிகிச்சையை ஆறு மாதங்களும் எடுத்துக்கொண்டு வெளித்தோற்றத்தில் மற்றும் உடையில் திருநங்கை மற்றும் திருநம்பியாக ஒரு ஆண்டு கண்டிப்பாக மருத்துவரின் கண் காணிப்பில் வாழ வேண்டும்.

மூன்றாம் பாலின அடையாள அட்டை பெறுவதற்கான மருத் துவப் பரிசோதனைகளும் ஒவ் வொரு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது. மருத்துவப் பரி சோதனைகளுக்கு பிறகு சமூக நலத்துறையை அணுகி அவர்கள் நிரந்தர அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x