Published : 05 Feb 2016 10:26 AM
Last Updated : 05 Feb 2016 10:26 AM

ஜோலார்பேட்டை அருகே ஐலேண்ட் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 55 பேர் காயம், 11 ரயில்கள் ரத்து

நாட்றம்பள்ளி அருகே ஐலேண்ட் விரைவு ரயில் பெட்டிகள் நேற்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 55 பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து சென்னை-பெங்களூரு இடையே 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் ஐலேண்ட் ரயில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, நேற்று அதிகாலை 4.20 மணிக்கு வேலூர் - நாட்றம்பள்ளி அருகே உள்ள வேட்டப்பட்டு அருகே வந்தபோது, இந்த ரயிலின் எஸ்-6 முதல் எஸ்-9 வரையிலான பெட்டிகள் திடீரென தடம்புரண்டு, தண்டவாளத்தில் இருந்து கீழிறங்கின.

இதனால் 400 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளம் முழுவதும் சேதமடைந்தது. அதிகாலை நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்டு பச்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஜோலார்பேட்டை யில் இருந்து ரயில்வே மருத்துவ அலுவலர் டாக்டர் வாணி தலை மையிலான குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். அங்கு லேசான காயமடைந்த 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொச்சி அப்துல் ரகுமான், திருச்சூர் பிரதீப், கோட்டயம் ஜேக்கப் குருவிலா, கோழிக் கோடு சுந்தரேசன், கோட்டயம் பிரகாஷ், வினய், கரண், மாலு உள்ளிட்ட 15 பேர் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு, தொடர்ந்து அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்த கோபால், காவல் கண்காணிப் பாளர் செந்தில்குமாரி, ரயில்வே டிஐஜி பாஸ்கரன், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விஜய குமார் ஆகியோர் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

இதையடுத்து தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் சென்னை-பெங்களூரு இடையே நேற்று 11 ரயில்கள் ரத்து செய் யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ரயில் தடம்புரண்ட சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

தமிழக, கர்நாடக பயணிகள் அவதி

கன்னியாகுமரி பெங்களூரு ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே தடம் புரண்டது. இந்த விபத்து காரணமாக பெங்களூரு வழித்தடத்தில் ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. சென்னை - பெங்களூரு டபுள்டெக்கர், சென்னை பெங்களூரு பிருந்தாவன், சென்னை சென்ட்ரல் பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் பெங்களூரு எக்ஸ்பிரஸ், பெங்களூரு அரக்கோணம் பாசஞ்சர் ஆகிய ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டன. ஜோலார்பேட்டை பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

சென்னை மைசூர் இடையிலான சதாப்தி ரயில் சேவையில் ஜோலார்பேட்டை மைசூர் இடையே மட்டும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மும்பை சிஎஸ்டி, கொச்சுவேலி விரைவு ரயில், கோயம்புத்தூர் ராஜ்கோட் விரைவு ரயில் ஆகியவை மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. பெங்களூரு, சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் காத்திருந்த தமிழக, கர்நாடக பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

உதவி எண்கள் அறிவிப்பு

இந்த ரயில் விபத்து தொடர்பாக தகவல்கள் அறிய தெற்கு ரயில்வே உதவி எண்கள் அறிவித்துள்ளது. மதுரை: 0452-2308250, சேலம்: 0427-2431947, திருச்சூர்: 0487-2430060, திருவனந்தபுரம்: 0471-2320012, பாலக்காடு: 0491-2555231/ 2556198 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x