

தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதியின்றி யாரும் ஒலி பரப்பக்கூடாது என இளையராஜா தொடர்ந்த வழக்கில் உயர் நீதி மன்றத்தில் நேற்று சமரச பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தைக்கு இளையராஜா நேரில் ஆஜரானார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனு வில், “நான் இசையமைத்த திரைப் படப் பாடல்கள் மற்றும் பக்திப்பாடல் களை ஒலிபரப்ப யாருக்கும் உரி மம் அளிக்கவில்லை. ஆனால் அகி மியூசிக், எக்கோ ரிக்கார்டிங் போன்ற சில நிறுவனங்கள் என் பாடல்களை கேசட் வடிவில் விற்பனை செய்து வருகின்றன. மேலும் 3வது நபர்களுக்கு என்னுடைய பாடலுக் கான காப்புரிமையை அவை வழங் கியுள்ளன. எனவே இந்நிறுவனங் களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆர்.சுப்பையா, இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பவும், கேசட் வடிவில் விற்பனை செய்யவும் 5 நிறுவனங்களுக்கு தடை விதித்து, பிரதான மனுவை தள்ளிவைத்தார். இந்த தடை உத்தரவை எதிர்த்து அந்நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், டி.எஸ்.சிவஞானம் ஆகி யோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸை சட்ட ஆணை யராக நியமித்தது. அதன்படி இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு இளையராஜாவும், ஆடியோ நிறுவனங்களின் பிரதிநிதிகளும் ஆஜராகினர். பிப்.25-க்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.