இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு: விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு: விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
Updated on
1 min read

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வெழுதியவர்கள் விடைத் தாள் நகல் பெற இன்று (செவ் வாய்க்கிழமை) முதல் விண் ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு மே மாதம் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதி (இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு) தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பயிற்சி மாணவர்களும், தனித் தேர்வர்களும், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் நகல் பெற இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 20-ம் தேதி வரை விண் ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் பெற, மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு தேர்வுத்துறை இணைய தளத்தில் (www.tndge.in) விண் ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அத்துடன் அதில் குறிப் பிட்டுள்ள கட்டணத் தொகையை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆசிரி யர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாகச் செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் பெற கட்ட ணம் ஒரு பாடத்துக்கு ரூ.275 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50. மறுகூட்டல் கட்டணம் ரூ.205. விடைத்தாள் நகல் பெற்ற பின்னர் விருப்ப முள்ளவர்கள் மட்டும் மறுகூட் டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in