Published : 12 Jul 2021 03:12 AM
Last Updated : 12 Jul 2021 03:12 AM

தமிழகத்தில் பிரிவினைவாதத்துக்கு இடம் இல்லை: கே.எஸ்.அழகிரி, டிடிவி தினகரன் கருத்து

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள முன்னாள் ஆளுநருமான பா.ராமச்சந்திரன் நூற்றாண்டு பிறந்த நாள் விழாசென்னை சத்தியமூர்த்தி பவனில்நேற்று நடைபெற்றது. பா.ராமச்சந்திரன் படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங். மாநில முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, பா.ராமச்சந்திரனின் மகன் டாக்டர் ரவிராம் ராமச்சந்திரன், மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறும்போது, "கொங்கு நாடு என்ற தனி மாநிலம்சாத்தியமற்றது, தேவையற்றது. தனி மாநிலம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் யாரும் கோரவில்லை. மக்களின் கவனத்தை திசை திருப்பவே, பிரித்தாளும் சூழ்ச்சியாக இந்த சர்ச்சையை பாஜகவினர் முன்னெடுத்துள் ளனர். தமிழகத்தில் ஒருபோதும் பிரிவினைவாதத்துக்கு இடமில்லை. அதேபோல, தமிழகத்துக்கு 2 தலைநகரம் என்பதும் சாத்தியமற்றது" என்றார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் எனஎழுந்திருக்கும் விஷமக் குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்க வேண்டியது அவசியம். சுய லாபத்துக்காக தமிழர்களை சாதி ரீதியாக கூறுபோட நினைப்பதை அனுமதிக்க முடியாது. சாதியை முன்வைத்து தமிழகத்தை கூறுபோட்டால், அது தமிழினத்துக்கு பெரும் கேடாக முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x