பூச்சி தாக்குதலால் கத்தரி விவசாயம் பாதிப்பு: சாக்கோட்டை விவசாயிகள் வேதனை

காரைக்குடி அருகே பெத்தாட்சி குடியிருப்பு பகுதியில் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கத்திரிக்காய்.
காரைக்குடி அருகே பெத்தாட்சி குடியிருப்பு பகுதியில் பூச்சித் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கத்திரிக்காய்.
Updated on
1 min read

காரைக்குடி அருகே சாக்கோட்டை பகுதியில் பூச்சித் தாக்குதலால் 20 ஏக்கருக்கு மேல் கத்தரி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி அருகே சாக்கோட்டை, பெரியகோட்டை, மித்திரங்குடி,பெத்தாட்சி குடியிருப்பு, பணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைக்குப் பிறகு கத்தரி பயிரிடுவது வழக்கம்.

இங்கு விளையும் கத்தரிக்காய் ருசியாக இருக்கும். இதனால் காரைக்குடி, கோட்டையூர் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

இந்நிலையில் சாக்கோட்டை பகுதிகளில் கத்தரிச் செடியில் பூச்சித் தாக்குதல் அதிகமாக உள்ளது. இதனால் 100 கிலோ வுக்கு 10 கிலோ மட்டுமே பூச்சி தாக்காத கத்தரிக்காய் கிடைக்கிறது. பலத்த நஷ்டம் ஏற் பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பெத்தாட்சி குடி யிருப்பு விவசாயி செல்லையா கூறியதாவது: அரை ஏக்கரில் பம்புசெட் மோட்டார் மூலம் கத்தரி சாகுபடி செய்துள்ளேன். தோட்டக் கலைத்துறை மூலம் வழங்கப்படும் கத்தரியை சாகுபடி செய்தால் இப்பகுதி மக்கள் விரும்பி வாங்க மாட்டார்கள். அதனால் தனியார் உரக்கடைகளில் கத்தரிச் செடிகளை வாங்கி சாகுபடி செய்கிறோம்.

அரை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவழித்தேன். பூச்சித் தாக்குதலால் நூறுக்கு 10 பூச்சி தாக்காத கத்தரிக்காய் கிடைப்பதே சிரமம். கிலோ ரூ.20-க்கு தான் வியாபாரிகள் வாங்குகின்றனர். மேலும் 100 பூச்சி கத்திரிக்காயை வெறும் ரூ.50-க்குத் தான் எடுக்கின்றனர். இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ரூ.5 ஆயிரம் கூட கிடைக்காது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in