

சென்னை மற்றும் புறநகர் பகுதிக ளில் முக்கியமான இடங்களில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஏற்கெனவே 100 சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதால், மேலும், 100 சிறிய பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று 65 சிறிய பேருந்துகளை தொடங்கிவைத்தார். அதன்படி, பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதலே சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை, புறநகர் பகுதிக ளில் முக்கியமான பஸ், ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மினி பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன. அந்த வகை யில், முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்துள்ள மினி பஸ்கள் ஆலந்தூர், அசோக் நகர், சிஎம்பிடி, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் இயக்கப் பட உள்ளது குறிப்பிடத்தக்கது.