புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்புகள், கல்லூரிகள் திறப்பு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்படுவதாக, முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக, மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் மருத்துவக் கல்லூரியை திறக்க அரசு திட்டமிட்டது. அதேபோல், பள்ளிகள் திறப்பு மற்றும் இதர கல்வி நிறுவனங்களை திறக்க ஆலோசித்தது.

தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்த நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ளோருக்கும், கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்க பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (ஜூலை 11) முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "புதுச்சேரியில் வரும் 16-ம் தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும். அதேபோல், அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in