

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன்பு விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு தகவல், ஒலிபரப்பு துறை, மீன்வளம், கால்நடை, பால்வளம் ஆகிய துறைகளின்இணை அமைச்சராக பொறுப்புவழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்று கொண்டார்.
இந்நிலையில், டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை, மத்திய அமைச்சர் எல்.முருகன் நேற்று சந்தித்தார். அவருக்கு, ஜே.பி.நட்டா இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக, மத்திய அமைச்சர்எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்துவாழ்த்து பெற்றதாகப் பதிவிட்டுள் ளார்.