டீசல் விலை உயர்வால் வாரத்துக்கு 2 நாட்கள் மட்டும் கடலுக்கு செல்ல மீனவர்கள் முடிவு

டீசல் விலை உயர்வால் வாரத்துக்கு 2 நாட்கள் மட்டும் கடலுக்கு செல்ல மீனவர்கள் முடிவு
Updated on
1 min read

டீசல் விலை உயர்வாலும் ஏற்றுமதி மீன்களின் விலை வீழ்ச்சியாலும் வாரத்துக்கு 2 நாட்கள் மட்டும் கடலுக்குச் செல்வதாக ராமேசுவரம் மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளம் அருகில் மீனவர் பிரதிநிதி தட்சிணாமூர்த்தி தலைமையில் மீனவர் பிரதிநிதிகளின் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் டீசல் விலை உயர்வாலும்,கரோனா பரவலால் ஏற்றுமதி மீன்களுக்கு விலை கிடைக்காததாலும் வாரத்துக்கு 3 நாட்கள் கடலுக்கு செல்வதற்கு பதிலாக வாரத்துக்கு 2 நாட்கள் மட்டும் கடலுக்குச் செல்வதாக தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் சிறிய ரக விசைப் படகுகள் வழக்கம்போல வாரத்துக்கு 3 நாட்கள் கடலுக்குச் செல்ல உள்ளதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in