Published : 21 Feb 2016 09:45 AM
Last Updated : 21 Feb 2016 09:45 AM

பேரவையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கைகுலுக்கி விடைபெற்றனர்

14-வது சட்டப்பேரவையின் இறுதி கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந் தது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கைகுலுக்கி விடைபெற்றனர்.

தமிழகத்தில் அதிமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி மே 22-ம் தேதியுடன் முடிகிறது. சட்டப் பேரவை பொதுத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்துவரும் நிலையில், 14-வது சட்டப்பேரவையின் இறுதி யாக, கடந்த 16-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. தேர் தல் வரைக்குமான இடைக்கால பட் ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடந்தது.

இந்நிலையில், பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன. காலை 10 மணிக்கு பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கின. கேள்வி நேரத்தை தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிக்கை அளித்தார். அதற்கு செ.கு.தமிழரசன், தனியரசு, கதிரவன் நன்றி தெரிவித்து பேசி னர். சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், பி.வளர்மதி, எஸ்.பி.வேலுமணி, கே.டி.ராஜேந்திர பாலாஜி, தேமுதிக அதிருப்தி எம்எல்ஏ ‘மாஃபா’ பாண்டியராஜன் ஆகியோர் முதல் வர் அறிவிப்புகளுக்கு நன்றி தெரி வித்தும், முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியும் பேசினர்.

தொடர்ந்து, நிதியமைச்சர் பதிலுரை, சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றம் ஆகியவை நடந்தன. இறுதியில், சட்டப்பேரவை நிகழ்வு கள் தொடர்பான தகவல்களை அளித்த பேரவைத் தலைவர் தனபால், பேரவையில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித் தார். பின்னர், தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்தி வைக்கப்படுவது தொடர்பாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

பேரவை நிகழ்ச்சிகள் அத்துடன் முடிந்தன. இதை தொடர்ந்து, பேர வைத் தலைவர் பி.தனபால், அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மற்ற அமைச்சர்கள், இடதுசாரி உறுப்பினர்கள் கைகுலுக்கி வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்தனர்.

பெண் உறுப்பினர்களும் பரஸ் பரம் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். ஆண் உறுப்பினர்களுக்கு நன்றி தெரி வித்தனர். காலையில் பேரவை தொடங்குவதற்கு முன்பாகவே வந்திருந்த ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு, ஜவுளித் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா அவர்களது வரிசைக்கே சென்று வணக்கம் தெரிவித்து வாழ்த்துகளை கூறினார்.

‘68 முடிந்து 69-வது வயதில்..

சட்டப்பேரவையில் நேற்று விதி 110-ன் கீழ் வேளாண்மை, மாற்றுத்திறனாளிகள் துறைகள் தொடர்பான அறிவிப்புகளை முதல் வர் ஜெயலலிதா வெளியிட்டார். இதற்காக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் பேசும் போது, ‘‘முதல்வர் 67 வயது முடிந்து 68-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்’’ என்று குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட முதல் வர் ஜெயலலிதா, ‘‘67 முடிந்து 68 அல்ல. 68 முடிந்து 69-வது வய தில் அடியெடுத்து வைக்கிறேன்’’ என்றார். தமிழரசன் திருத்திக் கொண்டு, பேச்சைத் தொடர்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x